மனைவி.. அரிவாளால் வெட்டிய கணவன்.! வெளியான காரணம்!

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.

திருப்பூர் சலவை பட்டறை ஜே.ஜே நகர் பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் குமார். இவர் தனது மனைவி தனலட்சுமி உடன் கடந்த 5 மாதங்களாக அந்த பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி தனலட்சுமி ஆண் நண்பர் காட்டுராஜா என்பவருடன் கள்ளக்காதல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனலட்சுமியின் கணவர் குமார் பலமுறை கண்டித்தும், அந்த ஆண் நண்பருடனான தகாத உறவை தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கணவர் குமார் சரண் அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.