நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்சார உற்பத்திக்கு பாதிப்பு… வெளியான தகவல்!

நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களில் எரிபொருள் பற்றாக்குறையினால் மின்சார உற்பத்திகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது.

இந்த நிலையில் தற்பொழுது போதியளவு நிலக்கரி கையிருப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மொத்த மின் உற்பத்தியில் 50 வீதமான அளவினை நிலக்கரி மின்உற்பத்தி பூர்த்தி செய்திருந்தது.

இந்த ஆண்டில் இந்த உற்பத்தியானது 30 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.