இலங்கைக்கு உதவ தயார் நிலையில் இருக்கும் தென்கொரியா

இலங்கையின் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என தென் கொரிய தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக் (ParkByeong-Seug) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் பார்க் பியோங்-சியோக்குமிடையில், நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க் பியோங்-சியோக்கிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்