இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா உறுதி.!

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 331,459,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,563,652 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 269,090,164 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,38,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,76,18,271 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,53,94,882 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,86,761 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 1,58,04,41,770 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8,891 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 8,209 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 8,891 ஆக அதிகரித்துள்ளது.