கனடாவில் தனது குழந்தையை கடத்திய தடுப்பூசி மறுப்பளார்

கனடாவில் தடுப்பூசி மறுப்பாளரான தந்தை ஒருவர் தமது 7 வயது மகளை, தாயாரிடம் இருந்து கடத்தி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாயார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது முன்னாள் கணவரால் 7 வயதேயான மகள் கடத்தப்பட்டதாக கூறும் Mariecar Jackson, இதுவரை தமது மகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

7 வயதான சிறுமியை இவ்வாறு மறைவாக வைத்திருப்பது பொருத்தமான செயல் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சிறுமி சாராவுக்கு தடுப்பூசி அளிக்க அவரது தாயார் விரும்பியுள்ளார். ஆனால் தடுப்பூசி மறுப்பாளரான அவரது தந்தை அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், கடந்த நவம்பர் மாதம் சிறுமி சாராவை அழைத்து சென்றவர் திரும்ப ஒப்படைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

சமீபத்தில் ஊடக விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அந்த தந்தை, தடுப்பூசிக்கு எதிராக தமது கருத்துகளை முன்வைத்துள்ளார். அதே வேளை, குறித்த சிறுமியும், தடுப்பூசி டி.என்.ஏ அமைப்பை மாற்றிவிடும், அதனால் நம்புவதாக இல்லை எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நாளடைவில் பெருந்துயரமாக அது மாறக் கூடும் எனவும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அது கொல்லும் என அந்த ஊடக விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக மட்டுமே Saskatchewan பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சிறுமியின் தாயார் Mariecar Jackson தெரிவிக்கையில், தன் மகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் சிறுமி பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே தம்முடைய முக்கிய கவலையாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவும், நீதிபதி முடிவு செய்ய அனுமதிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.