அடிக்கடி டீ குடிப்பவர்களுக்கு பசி எடுக்கமைக்கனா காரணம் தெரியுமா?

டீ என்றால் பலருக்கும் அதீத ப்ரியம் உண்டு. அதிலும் ஒரு நாளைக்கு 5 முறையாவது டீ-யை அருந்துபவர்களும் உண்டு. எந்த அலுவலகம் கடைகள் சென்றாலுமே டீ, காபியை தான் அதிகம் குடிப்பார்கள். ஒரு டீயை எப்போ குடிச்சாலும் உடனே ஆற்றலும், உற்சாகமும் பீரிட்டு வரும்.

மூணு வேளை சோறு சாப்பிடுறாங்களோ இல்லையோ, ஒரு நாளைக்கு 10, 15 டீ குடிச்சிட்டு சுத்துறவங்க கூட இருக்காங்க. பொதுவாக பசிக்கல அதனால டீ குடிக்கிறேன்னு நிறையபேர் சொல்லி கேட்டு இருப்பீங்க. ஏன். நாம கூட சொல்லியிருப்போம். உங்களுக்கு தெரியுமா? இப்படிப்பட்டவங்களுக்கு பசிக்காம இருக்க காரணமே டீ தான் என்று.

வெறும் டீ குடிப்பதால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் பசி எடுக்காது. பசித்தாலும் வயிறார சாப்பிட முடியாது. எனவே, வெறும் டீ-யை குடிப்பதை நிறுத்திவிட்டு டீயுடன் பிஸ்கட், ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்.

அடுத்தாக காலை எழுந்ததில் இருந்து எண்ணிக்கையே இல்லாமல் அதிகமாக டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தை குறைத்து இயற்கையான பசியைக் கட்டுப்படுத்தும்.

எனவே, அதிகமாக டீ குடிப்பதை நிறுத்தி அளவோடு குடிக்கலாம். மிகவும் சூடாக டீ குடிப்பதால் வாய், தொண்டை, உணவுக் குழாய் மற்றும் வயிறு எரிச்சலடையும்.

இதனால் வயிறு மிகவும் பாதிக்கப்பட்டு பசியே எடுக்காது. மேலும், உணவிற்கு முன் டீ குடிப்பதால் உணவை சுவையற்றதாக மாற்றி உங்களுக்கு சாப்பிடும் எண்ணத்தையே போக்கிவிடும்.

அதுமட்டுமின்றி, உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் ஏற்காத அளவுக்கு டீ மாற்றிவிடும். எனவே, உணவுக்கு முன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.