பருத்திவீரன் படத்தையே மிஞ்சும் கெட்டப்பில் நடிகர் கார்த்தி !

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து சிறந்த விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த கொம்பன் படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகவுள்ளார். நடிகர் சூர்யா 2D நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருமன் படத்தின் First Look-யை வெளியிட்டுள்ளது படக்குழு. பருத்திவீரன் படத்தின் கெட்டப்பில் மீண்டும் கார்த்தியை பார்த்தது போல் உள்ளது விருமன் பட First Look.