தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த சம்பவம் இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இவர்களின் பிரிவுக்கு மறைமுகமாக இருவரும் பதில் கூறி வந்தனர். இதனிடையே, இதுவரையில், ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வந்த நாக சைதன்யா தற்போது பொதுமேடையில் இது குறித்து பேசி உள்ளார்.
அவரின் நடித்த பங்கர் பங்கர்ராஜூ படத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, பரஸ்பர நலன் கருதியே எனது மனைவி சமந்தாவை விட்டு பிரியும் முடிவு எடுக்கப்பட்டது என்றும்,. அந்த கடினமான காலங்களில் எனது முழு குடும்பமும் எனக்கு ஆதரவாக நின்றது.
இது எங்கள் இருவரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் இருவரும் நன்றாக இருக்கிறோம். தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.