கல்வி அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!

வீட்டில் இருந்து வேலை செய்வதனை ஊக்குவிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (12-01-2022) புதன்கிழமை மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, நாட்டில் முடக்க நிலை அறிவிக்கப்பட்ட காலங்களில் பலர் இவ்வாறு வீட்டிலிருந்து வேலை செய்தனர்.

நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு கருமங்களை வீட்டிலிருந்தே செய்ய முடியும் என்பது கொரோனா முடக்க நிலைமைகளின் போது தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.