யுவதிகளுடன் விடுதியில் சிக்கிய முகாமையாளர்

நீண்டகாலமாக கண்டியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் வீடொன்றில் இயங்கி வந்த தகாத விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதியின் முகாமையாளர், 27 மற்றும் 28 வயதுடைய இரண்டு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த சொகுசு வீடு மசாஜ் நிலையமாக இயங்கி வந்ததாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேசமயம் குறித்த சொகுசு விடுதியில் பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.