பிக் பாஸில் தாமரை சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரை விஜய் டீவியில் சம்பாதித்த பணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தாமரைக்கு ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம்.

தாமரை பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 98 நாட்கள் இருந்தார் (அதாவது 98÷7 = 14 வாரங்கள்).

14 வாரங்கள் தாக்குபிடித்த தாமரை பிக் பாஸ் மூலம் சம்பாதித்த மொத்த பணம் 14×70,000 = 980,000 மட்டுமே. இதில் 30 % வரியை பிடித்துவிடுவார்களாம்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தாமரை வெளியேறியது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கமலுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

நீங்கள் வெளியேறுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை, உங்களுக்கு வாக்களிக்காதமைக்கு மக்கள் நிச்சயம் வருந்துவார்கள் என்பது என்னுடைய கணிப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நிரூப்பை விட தாமரை அதிகமான வாக்குகளை பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.