நாட்டின் வானிலை மாற்றம்!

இலங்கைக்கு அண்மையாக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே வட அகலாங்குகள் 04 N – 10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80E – 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையில் , திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவிலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.