தப்பி, தவித்து மீண்டு வந்த யாஷிகா.! வெளியான வீடியோ..!!

தமிழ் சினிமாவில் நடிகை யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கவர்ச்சியை காட்டி நிறைய ரசிகர்களிடம் சென்றடைந்தார். அதற்குப் பிறகு இவர் நடித்த படங்களிலும் கூட யாஷிகாவுக்கு கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது.

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா கலந்து கொண்டார். இதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். நடிகை யாஷிகா அப்போது மகத்தை சாதனத்தை பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவர் மகனுடன் ஊர் சுற்றி வந்தார்.

அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஐஸ்வர்யா தத்தாவுடன் யாஷிகா மிக நெருக்கமான தோழியாகிவிட்டார். இவர்களது நட்பு தற்போது வரை தொடர்கிறது. யாஷிகாவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் விபத்து ஏற்பட்டது. அதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

நடிகை யாஷிகாவுக்கும் மிகப்பெரிய காயங்கள் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டு மாதங்கள் படுக்கையிலேயே இருந்த யாஷிகா சமீபகாலமாக நடமாட ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விபத்துக்கு பின் மீண்ட வீடீயோவை வெளியிட்டு இருக்கின்றார். இதை கண்ட ரசிகர்களுக்கு அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.