சொறி, சிரங்கு, படை போன்றவற்றை அடித்து விரட்டும் தைலம்..

விஷத்தன்மை கொண்ட எருக்கு நம்முடைய உடலில் இருக்கும் விஷத்தை நீக்கும் ஆற்றல் உண்டு.

எருக்கில் இரண்டு வகையுண்டு. நீல எருக்கு , வெள்ளெருக்கு.

இதில் இரண்டாவது வகையான வெள்ளெருக்கில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

எருக்கம் இலைகளைக் கொண்டு பல்வேறு வகை தைலங்கள் தயாரிக்கலாம்.

வெவ்வேறு பிரச்சினைகளுக்கு வெவ்வேறு விதங்களில் இந்த தைலங்களைப் பயன்படுத்தலாம்.

சருமப் பிரச்சினைகள், தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களைச் சரிசெய்ய இந்த எருக்கம் தைலம் பயன்படுகிறது.

அதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
எருக்கம் இலைச்சாறு – 50 மில்லி
மஞ்சள் பொடி – 20 கிராம்
கடுகு எண்ணெய் – 150 மில்லி
தயாரிக்கும் முறை
எருக்கம் இலையை இடித்துச் சாறெடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த சாற்றுடன் மஞ்சள் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு, அந்த கலவையை கடுகு எண்ணெயில் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.

பயன்படுத்தும் முறை

அந்த எண்ணெயை சருமத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து நன்கு சோப்பு போட்டு வெந்நீரில் கழுவி வர வேண்டும்.