கனடா செல்ல இருப்பவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

கனடா நாட்டுக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கனடாவில் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா மக்கள் கனடா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் 80 இடங்களை கணடறிந்த அமெரிக்கா அவற்றை நான்காம் நிலை பட்டியலில் வைத்துள்ளது. கனடா, வெகுகாலமாகவே அமெரிக்கர்களுக்கு பிரபலமான இடமாக இருந்து வருகிறது.

ஆனால் பெரும்பாலான தொற்று நோய்களால், இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்கும் மூடப்படுவது வழக்கமாகி வருகிறது.