தினமும் ஒரு கீரை உண்பதால் கிடைக்கும் நன்மை தெரியுமா?

பல்வேறு வகை உணவுகள் இருந்தாலும் அவற்றில் சில உணவு வகைகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. உணவின் தரமானது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.

குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, புரதம், போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அந்தவகையில் தினமும் ஒரு கீரை விகிதம் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

பசலை கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. செரிமான பிரச்சனை முதல் உடல் எடையை குறைப்பு வரை இந்த கீரை உதவுகிறது. மேலும் இதில் போலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.
பார்ஸ்லி சாப்பிட்டு வந்தால் கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்புகளை உறுதிபடுத்த கூடியது. கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளது.
உடலுக்கு தேவையான பல சத்துக்கள் வெந்தய கீரையில் உள்ளது. இதில் குளுக்கோஸை கட்டுபடுத்த கூடிய அளவிற்கான கிளைசிமிக் அளவும் உள்ளது. கால்சியம் சத்து வெந்த கீரையில் நிறைந்துள்ளதால் எலும்புகள் பலவீனமாவதையும் தடுக்கும்.
உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்க கூடிய தன்மை இந்த கீரை வகைக்கு உண்டு. இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் வலிமை பெறும்.

புதினாவில் மணம் மட்டுமில்லாமல் பல்வேறு சத்துகளும் நிறைந்துள்ளது. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் பைட்டோ நியுட்ரியன்ஸ் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் சி, டி ஆகிய எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணிகளும் உள்ளன.