தங்கத்தில் ஜொலிக்கும் ஸ்வீட்

சாப்பாட்டு பிரியர்களுக்காகவே மிக வித்தியாசமான இனிப்புகள் விற்பனைக்கு வருகிறது, அதிலும் பல சுவைகளை ஒன்றாக கலந்து செய்யப்படும் உணவு பதார்த்தங்களுக்கு மவுசுகளும் இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் தங்க முலாம் பூசப்பட்ட இனிப்பு வகையொன்று கடந்த வாரம் இணையத்தில் டிரெண்டானது.

டெல்லியின் முஜிப்பூர் பகுதியில் உள்ள ஷகுன் இனிப்பகத்தில் தான் இந்த தங்க முலாம் பூசப்பட்ட ஸ்வீட் விற்பனை செய்யப்படுகிறதாம்.

இதுதொடர்பான தன்னுடைய சமூகவலைத்தளப்பக்கத்தில் அர்ஜூன் சவ்கார் வெளியிட்ட வீடியோவில், சமையல் கலை வல்லுனர் ஒருவர் சுடச்சுட மிட்டாய் தயார் செய்து, அதில் தங்க முலாம் பூசி, வாடிக்கையாளர்களுக்கு பகிர்கிறார்.

கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த ஸ்வீட்டை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை நமக்குள் வருகிறது, ஆனால் இதன் விலையே ஒரு கிலோ ரூ.16,000 ஆம்.

இந்த வீடியோ வைரலாக, இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சாப்பிட வேண்டுமா? என்ற கலவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.