வவுனியாவில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம்..!! காரணம் என்ன ??

வவுனியாவில் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

வவுனியாவிற்கு இன்று (07-01-2022) விஜயம் செய்த சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், பொதுமக்களுடனான அரசியல் நிகழ்வொன்று மாலை 3.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றி முடிந்ததும் கூட்டம் நிறைவடைந்திருந்தது. இதையடுத்து, வெலிஓயா பகுதியில் இடம்பெறும் மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார்.

இதன்போது, பொது மக்களும் கலைந்து சென்றுவிட்டனர். குறித்த நிகழ்வில் நடனமாடுவதற்காக இரு சிறுமிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

இருப்பினும் கூட்டம் முடிவடைந்து அனைவரும் சென்றமையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அவர்களது மனம் புண்படாத வண்ணம், அவர்களது நடன நிகழ்வு ஒருசிலருடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.