சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் சரத்குமார் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போதும் பிரபலமான நடிகராக சரத்குமார் வளம் வருகின்றார்.

இடையில் சூரியவம்சம், நாட்டாமை உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கிய நடிகர் சரத்குமார்.

நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார். இன்றும் சளைக்காமல் புதிய புதிய திரைப்படங்களிலும் வெப்சீரிஸிலும் சரத்குமார் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் அவர் அண்மையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

அங்கு பேசிய சரத்குமார், “பிசிக்கல் ஃபிட்னஸ் மட்டுமல்ல, மெண்டல் ஃபிட்னஸூம் வேண்டும். இரண்டுமே உள்ளதுதான் பிக்பாஸ் என்று நான் பார்க்கிறேன்.

நானும் தொடக்க காலத்தில் தெரு தெருவா பேப்பர் போட்டேன், நிறைய வேலைகள் செய்தேன். மன உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது!”.. என்று கூறினார்.

சரத்குமார் பேசியதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் உருகிப் போயினர். அதேசமயம் மோட்டிவேஷனகாவும் உணர்ந்தனர்.