அவிசாவளையில் யாழ் சிறுமிகளிற்கு நேர்ந்த கதி!

கடந்த 30 ஆம் திகதி அவிசாவளை ஹங்வெல்ல குமாரி எல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது அகால மரணத்தை தழுவிக்கொண்ட மூன்று இளம் பெண்களின் இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெறவுள்ளன.

மேரி பேபினி செல்வரஜீவனின் பூதவுடல் இன்று வத்தளை கெரவலபிட்டியிலுள்ள இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு இன்று இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளதுடன், அவருடன் உயிரிழந்த ஏனைய இரு சிறுமிகளின் உடல்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டு அடக்கம்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், உறவினர்களுடன் எல்ல நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்றனர். அதன்போது நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் நீராடிக் கொண்டிருந்தவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், மூவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.