வேக வைத்த முட்டையை உண்பதால் உடலில் ஏற்ப்படும் மாற்றங்கள்

முட்டையில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்திருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

குறிப்பாக வேக வைத்த முட்டையில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு பல அற்புத பயன்கள் கிடைக்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஒரு முட்டையில் 6 கிராம் உயர்தர புரோட்டின் மற்றும் வைட்டமின் சி தவிர தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

முட்டைகளில் காணப்படும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள், உடலால் உற்பத்தி செய்ய முடியாத புரதத்தின் கட்டுமானத் தொகுதிகளால் நிறைந்துள்ளன.

முட்டையில் உள்ள ஃபோலேட், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் உள்ளிட்டவை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

முட்டையில் இருக்கும் வைட்டமின் டி எலும்பு வலிமைக்கு, வைட்டமின் ஏ கண்களுக்கு, வைட்டமின் பி-6 மூளை வளர்ச்சிக்கு, பி12 ரத்த சோகைக்கும் நல்லது.

ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடுவது மாரடைப்பு, பக்கவாதம் அல்லது அகால மரணம் ஆகிய அபாயங்களை குறைக்க உதவுகின்றது.