சித்தப்பாவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் புத்தகங்கள் கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் கலையூர் பகுதியை சேர்ந்த கருப்பு ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

கருப்பு ராஜா அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இந்நிலையில், சில நாட்களில் அந்தப் பெண்ணுடன் பேசுவதையும் கருப்பு ராஜா நிறுத்தியுள்ளார். இந்த விவகாரம் அந்த பெண்ணின் சித்தப்பா முறையான முனியசாமி என்பவருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, அந்தப் பெண்ணிடம் உனக்கு கருப்பு ராஜாவை திருமணம் செய்து வைக்கிறேன் எனக் கூறி ஊரின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு வர சொல்லி இருக்கிறார். அதனை நம்பிய அந்த பெண்ணும் அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்துக் கொண்ட காதலர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனை முனியசாமி அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த முனியசாமி இந்த வீடியோவை காண்பித்து அவர்களை மிரட்டி உள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வெளியில் தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என நினைத்த அந்தப் பெண்ணும் இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை இந்நிலையில் கடந்த 16.12.2021 ஆம் தேதி அந்த கருப்பு ராஜாவுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை மதுரை வர கூறியுள்ளார்.

அவர் சொன்ன இடத்திற்கு சென்று அந்தப் பெண் கருப்பு ராஜாவுக்காக நீண்ட நேரம் காத்திருந்தார் ஆனால் நீண்ட நேரமாகியும் கருப்பு ராஜா வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் இது குறித்துமுனுசாமியிடம் கேட்டுள்ளார்.

உடனே தான் வைத்திருந்த தாலியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டி விட்டு அதையும் அவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். மேலும் இந்த படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் முனியசாமியின் மனைவி சௌந்தரவல்லி போனை தற்செயலாக பார்த்தபோது அதில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவர்களிடம் சண்டை போட்டு கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

இனியும் பொறுக்க முடியாது என முடிவு செய்த அந்தப் பெண் நடந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார் இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முனியசாமி கைது செய்தனர். சித்தப்பா முறை உள்ள ஒருவரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.