தமிழக கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட நடராஜன்

தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் காயம் காரணமாக சமீப நாட்களாக நடக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளையும் அவர் தவறிவிட்டார்.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியில் இருந்தும் அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதற்கு முக்கியகாரணமாக நடராஜன் இந்த ரஞ்சி கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறாததற்கு அவர் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.

ஆனால், நடராஜன் மீண்டும் அணிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் உடல்நலம் தகுதி பெற்றால் மீண்டும் சேர்க்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது,.

ரஞ்சிப்போட்டிக்கணக்கான அணி;

விஜய் சங்கர், வாசிங்டன் சுந்தர், பாபா இந்தரஜித், பாபா அப்ரஜித், ஜெகதீசன், ஷாரூக்கான், சாய் சுதர்சன், ரஞ்சன் பால், சூரியபிரகாஷ், கௌசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தீப் வாரியர், எம். முகமது. சிலம்பரசன். சரவணகுமார், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ், சாய் கிஷோர். எம்.சித்தார்த், கவின்.