இலங்கைக்கு வர இருக்கும் ஆபத்து

இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மீதான பொருளாதார சுமை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதக்காலத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் கூட பால் மாவின் விலை 150 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ மாவின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை மொத்தமாக 2000 ரூபாவுக்கு அதிகமான அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பாண் உட்பட்ட வெதுப்பகப் பொருட்கள்,சீமெந்து உட்பட்ட கட்டிட நிர்மாணத்துக்கான பொருட்கள், அரிசி, மரக்கறிகள், கோதுமை மா, பெற்றோல் உட்பட்ட எரிபொருட்கள், முச்சக்கர வண்டி உடபட்ட பேரூந்துகளின் கட்டணங்கள், சமையல் எரிவாயு, பால்மா, போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இலங்கையில் பல ரில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது

அதேநேரம். சமாந்தரமாக பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றன.

எனவே எதிர்காலத்திலும் இலங்கையின் மக்கள் மேலும் பல பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.