இலங்கையின் தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடு

இலங்கையின் தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ. ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் 2022ம் ஆண்டுக்கான சவால்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இலங்கையின் தேசிய வங்கிகளில் தற்போது ரூபாவிற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இறக்குமதிக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கிய பின்னர் பிரதான இரண்டு அரச வங்கிகளிலும் பாரிய அளவில் ரூபாவிற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய முழு வங்கிக்கட்டமைப்பிலும் ஒரு நாளுக்கான ரூபாவின் பற்றாகுறையானது 450 பில்லியன் ரூபாவாக காணப்படுவதாக தரவுகள் மூலம் வெளிப்படுகின்றது. தேசிய நிதி விடயத்தில் யாருமே கவனத்தில் கொள்ளாத விதமாக நெருக்கடி நிலைமையொன்று உருவாகிக்கொண்டுள்ளது.

ஒருபுறம் அரசாங்கத்திற்கு கடன்களை கொடுத்து அரசாங்கத்தை கொண்டு நடத்தவும், மறுபுறம் வங்கிகளுக்கு கடன்களை கொடுத்து வங்கிகளை கொண்டு நடத்தவும் வேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்தியவங்கி தள்ளப்பட்டுள்ளது.

இதுவே நாட்டின் பாரிய நிதி நெருக்கடிக்கான வெளிப்பாடாக நாம் அவதானிக்கின்றோம். ஆகவே உடனடியாகவும் அவசியமாகவும் எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுத்தாக வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளமை தெரிய வந் துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியே இதற்குக் காரணம்.

இந்த கொள்கலன்களில் சுமார் 30,000 மெட்றிக் தொன் அத்தியா வசிய பொருட்கள் இருப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்கு மதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அத்தியாவசிய உணவு கொள்கலன்களை துறை முகத் திலிருந்து விடுவிக்காவிட்டால் , நாட்டில் பொருட்களின் விலை வேகமாக உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவைத் தவிர ஏனைய அத்தியாவசிய உண வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு மாதத் திற்கு சுமார் 110 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு செல வாகிறமை தெரிய வந்துள்ளது.