பிரியந்த குமாரவிற்கு பதிலாக பாகிஸ்தானில் மற்றுமோர் இலங்கையர்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவுக்குப் பதிலாக வேறொரு இலங்கையரை நியமிக்க அந்நிறுவன நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மத ஒத்துழைப்புக்கான விசேட தூதுவர் ஹாபிஸ் தாஹிர் மெஹ்மூத் அஃப்ராபி மற்றும் மதத் தலைவர் மௌலானா தாரிக் ஜமீல் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியந்த குமார கடந்த 3ஆம் திகதி தமது மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி தொழிற்சாலை ஊழியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..