இந்தியாவில் 100 க்கும் மேற்ப்பட்ட பெண்களை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!

இந்தியா – தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது30). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி பெண்கள் அவர்களது போட்டோவை அவருக்கு அனுப்பினர். இதை பார்த்த அவர் அவர்களது அழகை வர்ணித்து ஆபாசமாக பேசுவார்.

அவரது ஆசை வார்த்தையை நம்பிய பெண்கள் தங்களுடைய நிர்வாண படம், குளியல் காட்சிகளை அஜய்க்கு அனுப்பியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அவரது வலையில் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், குடும்ப பெண்கள் மற்றும் அரசு பெண் அதிகாரிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் வீழ்ந்தனர். அவர்கள் அஜயால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் அஜயிடம் சிக்கிய பெண்கள் அவமானத்திற்கு பயந்து பொலிசில் முறைப்பாடு தராததால் மேலும் மேலும் பல பெண்களிடம் அத்துமீறி உள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு சில பெண்கள் துணிந்து ஐதராபாத்தில் உள்ள பொலிஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் ரகசிய விசாரணை நடத்தியதில் அஜய் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஐதராபாத் பொலிசார் வழக்கு பதிவு செய்து அஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.