வெளிநாடொன்றில் குழந்தையின் உயிரைப் பறித்த வாழைப்பழம்

பிரித்தானியாவின் வேல்ஸில் இரண்டு வயதுக்கு குழந்தை வாழைப்பழ துண்டை சாப்பிட்டு மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dylan John James Greig என்ற 2 வயது குழந்தைக்கு அவன் தாயார் Danielle Butterley (30) வாழைப்பழ துண்டை கொடுத்தார். பின்னர் 30 வினாடிகள் வீட்டின் பக்கத்து அறைக்கு சென்ற Danielle மீண்டும் Dylan அறைக்கு திரும்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் குழந்தையின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி குழந்தை அவதிப்பட்டுள்ளது. இதனையடுத்து 999 அவசர உதவிக்கு அழைத்துள்ளார் Danielle. அதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

குறித்த சம்பவமானது கடந்த ஜூலை மாதம் நடந்தது, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.