இரண்டு வருடங்களில் மாத்திரம் சுற்றுலாத்துறைக்கு ஏற்ப்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

நாட்டில் கடந்த இரு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு சுமார் 14 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்புவதால் விரைவில் இந்த வீழ்ச்சியானது சீராகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் மாநாட்டில் கலந்துகொண்டுபோதே அவர் தெரிவித்தார்.