இலங்கையில் சுற்றுலா செல்பவர்களுக்கு பயனுள்ள APP

இயற்கை எழில் கொஞ்சும் அழகான நாடு இலங்கை, இங்கு சென்றால் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல இடங்களை காணலாம்.

சிகிரியா, கண்டி, யாழ் தேசிய பூங்கா, நுவரெலியா என பல இடங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றால், எந்தெந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம், அதன் தனித்துவம்- சிறப்புகள் என்ன என்பது குறித்து e-Info CCF Sri Lanka என்ற செயலியில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களது விரல் நுனியில் சுற்றுலா தளங்களின் வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் 30க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்கள் பற்றி தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன, இந்த செயலியை உங்கள் மொபையில் பதிவேற்றம் செய்து இலங்கை கலாச்சாரம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா செல்லும் நபர்கள், வெறும் அழகினை மட்டும் ரசிக்காமல் வரலாற்று தகவல்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் குறித்த செயலி வழங்குகிறது.