70 மடங்கு வேகம் எடுக்கும் Omicron

தற்போதைய சூழலில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் Omicron வைரஸ், டெல்டா வைரசை விட 70 மடங்கு வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும் கொரோனா ஏற்படுத்திய விளைவுகளை விட, Omicron அதிக விளைவுகளை ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அதாவது கொரோனாவின் டெல்டா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பில், 10-ல் ஒரு பங்கு பாதிப்பையே Omicron ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் Omicron வைரசானது ஒருவரது உடலில் இருந்து மற்றொருவர் உடலுக்கு வேகமாக பரவினாலும், நுரையீரலில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாது.

அறிகுறிகளும் லேசாகவே தென்படுவதால், பலருக்கும் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கொரோனாவை விட மிகப்பெரிய பாதிப்பை Omicron ஏற்படுத்தாது என்ற போதிலும், உருமாற தொடங்கினாலும் பாதிப்புகள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.