விமானத்தில் உள்ளாடையை மாஸ்க்காக அணிந்த ஆண் நபரால் பரபரப்பு!

அமெரிக்காவில் மாஸ்க் அணியாமல் உள்ளாடையை கொண்டு முகத்தை மறைத்தபடி இருந்த பயணியால் சிறிது நேரம் பரபரப்பானது.

Omicron மாறுபாடானது தற்போது வரை 70 நாடுகளுக்கு பரவியுள்ளது, அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் உலக நாடுகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனையடுத்து விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன, இதை பின்பற்றாத நபர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் பயணி ஒருவர் உள்ளாடையை மாஸ்காக அணிந்து கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஃபோர் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஆடம் ஜேன் என்ற பயணி ஏறியுள்ளார்.

மாஸ்க் அணியாத ஆடம் ஜேன், உள்ளாடையை கொண்டு முகத்தை மறைத்திருந்தார், இதைப்பார்த்த பணிப்பெண், “நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் கீழே இறக்கிவிடப்படுவீர்கள்” என கூற இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆடம் ஜேன் கீழே இறங்க, அவருக்கு ஆதரவாக ஒரு சில பயணிகளும் இறங்கியதால் பரபரப்பானது.