நாட்டில் மற்றுமோர் புதிய நோயாளி அடையாளம்

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இல்லாமல் தற்போது மலேரியா நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞருக்கு மலேரியா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ளார். அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரியா அறிகுறிகள் இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்.பிராந்திய மலேரியா தடுப்பு அதிகாரிக்கு அறிவித்ததையடுத்து அவருக்கு மலேரியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மலேரியா இல்லாத நாடுகளின் பட்டியலில் இலங்கை இருந்தாலும், பிற நாடுகளில் இருந்து வருபவர்களால் மலேரியா பரவும் அபாயம் உள்ளது. ஜெயகுமாரன் தெரிவித்தார்.