கடற்குதிரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், காணப்படும் மீன் இனங்களில் ஒன்று தான் கடல் குதிரை.

இது சுமார் 6 சென்டி மீட்டர் முதல் 17 சென்டி மீட்டர் வரை நீளம் உடையது. மேலும் 4 கிராம் முதல் 14 கிராம் எடை உடையது.

கடற்குதிரைகள் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமியில் தோன்றியவைகள் ஆகும். இதன் ஆயுட்காலம் 1 முதல் 5 ஆண்டுகள் .

கண்கள் மிக சிறியது. இது தன்னுடைய கண்களை எந்தப் பக்கமும் திருப்பி கொள்ளும். மேலும் கடல் குதிரை 3 சென்டி மீட்டர் தொலைவில் இருந்து உணவை உறிஞ்சும். மேலும் இது சிறிய மீன்களுக்கு உணவளிக்கிறது.

இவற்றின் வால்கள் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக பயன்ப்படுகிறது. கடல் குதிரை தங்கள் சக்திவாய்ந்த வால்களை உணவுக்கு சண்டையிடவும், புயலின் போது நங்கூரமிடுவதற்கும் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.

எங்கு இருக்கும்?

கடல் குதிரை அதிகமாக சீவீட் என்னும் கடல் தாவரம் இருக்கும் இடத்தில் இருக்கின்றன. இது தன்னுடைய வாலை சீவீட் தாவரத்தின் மேலாக சுற்றி கொண்டு தலை கீழாக தொங்கும்.

இந்த தாவரத்தின் அடியில் இது அதிகமாக இருக்க காரணம் சீவீட் தாவரத்தின் நிறத்தில் இந்த மீன்கள் இருப்பது தான். இதன் அடியில் இருப்பதினால் எதிரிகளிடத்தில் மாட்டாமல் தப்பித்து விடுகிறது.

உணவு?

இவை உயிருடன் வாழ கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட உப்பு இறால்களை உட்கொள்ளலாம். நண்டுகளுக்கு மிக பிடித்த உணவாக கடல் குதிரை உள்ளது.

இனப்பெருக்கம்

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை 200 ஆண் கடல் குதிரைகளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும்.

அந்த முட்டைகளை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.

இந்த முட்டைகள் சில நாள்கள் கழித்து பொரிக்கிறது. குஞ்சுகள் பொரித்த பிறகு சிறிது காலம் இதன் பையில்தான் வளர்கின்றன.

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் ஆண் கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது கடலுக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும்.

உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இது 50 முதல் 100 வரை குஞ்சுகளை பொரிக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் சுமார் ஒரு செ.மீட்டராக இருக்கும்.