பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டதன் பின்னர் தொற்று உறுதியானவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இரு தடுப்பூசிகளையும் பெற்று தொற்று உறுதியானவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி பெற்ற திகதியிலிருந்து 6 மாதங்களின் பின்னரே மூன்றாவது தடுப்பூசியை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.