சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விராட் கோலி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட தயாராக உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முன்னதாக ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட தயார் ,ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க விரும்பவில்லை மேலும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கோலி விளக்கமளித்துள்ளார்.