வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா?

தினமும் காலையில் எழுந்தவுடன் அனைவருக்கும் டீ, அல்லது காபி குடிக்க வேண்டும் என்று தோன்றும். அடிக்கடி டீ, காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியம் வீணாக வாய்ப்புள்ளது.

இதனால் குடிக்கும் டீயில் லேசாக இஞ்சி சேர்த்து குடித்தால் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கின்றது. சரி வாங்க உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய இஞ்சியை தினமும் காலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..

இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ தூள் போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறைவதை தானாக உணர்வீர்கள். தினமும் காலையில் டீ குடிக்கும்போது அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் அந்த டீயின் சுவையே வேற லெவலில் இருக்கும்.

இஞ்சி ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்கள் நிறைந்ததால் சருமத்தில் உள்ள நச்சுகளை நீக்கி முகம் பளபளப்பாக்க உதவும். அது போல தலைமுடி அதிகம் உதிர்வதில் இருந்து பராமரிக்கப்படுகின்றது.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வயிற்றில் செரிமாணப் பிரச்னை இருந்தால் வாந்தி, நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டாலே குணமாகும். தினமும் காலை உணவுடனும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது நோய் அழற்சி பிரச்னைக்கு தீர்வு அளிக்கும்.

கொழுப்பை குறைக்க இஞ்சி சிறந்த தேர்வு. கொழுப்பு குறைவதால் இதய பாதிப்புகளும் இருக்காது. அதுபோல பயணத்தின் போது உங்களுக்கு சீக்கிரமே களைப்பு ஏற்படலாம். அந்த சமயங்களில் இஞ்சி டீ குடிக்கலாம். இது காலையில் எழும் போது உங்களுக்கு உடல் ஆற்றலை அதிகரிக்கும்.