அறிமுகமாகும் புது ஒப்போ டேப்லெட்

ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ஒப்போ நிறுவனம் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஒப்போ டேப்லெட் மாடல் சீன சந்தை மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஒப்போ பேட் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 11 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். 12 வழங்கப்படலாம்.