உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,524 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,192-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,888 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,104-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,538 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,304-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,902 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,216 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ரூ. 400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 67.60 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 67,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.