பிரபல பாடகியின் தந்தை மர்மமான முறையில் மரணம்

தெலுங்கு சினிமா பாடல்கள் பாடி மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் ஹரினி ராவ்.

இந்துஸ்தானி கிளாஸிகல் இசை நிகழ்ச்சியில் அதிகம் பங்குபெற்றிருக்கிறார். இவரது தந்தை A.K. ராவ் ஹைதராபாத்திரல் வசித்து வருகிறார்.

கடந்த நவம்பர் 13ம் தேதி தொழில் விஷயமாக பெங்களூர் சென்றுள்ளார், நவம்பர் 21ம் தேதி ஹைதராபாத் கிளம்ப கார் எல்லாம் புக் செய்துள்ளார்.

அதன்பிறகு அவர் மிஸ் ஆகியுள்ளார், பெங்களூரில் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவரது உடம்புக்கு பக்கத்தில் கத்தி, சிஸ்சர் எல்லாம் இருந்துள்ளதாம். ஹரினி கடைசியாக தனது அப்பாவிடம் நவம்பர் 19ம் தேதி பேசியுள்ளார், அவரது மரண செய்தி குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.