பிரபல தொகுப்பாளினி அகல்யாவிற்கு திருமணம்

காமெடியான பேச்சால் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசன்.

இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் அகல்யா புகைப்படத்துடன் ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாம். நிச்சயதார்தத்தில் வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் அகல்யா இப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.