பிரபல நடிகரின் அதிரடி எண்ட்ரி: இடி மின்னலுடன் வரவேற்ற பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் அதிரடியாக நுழைந்துள்ளார்.

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இரண்டு பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக சஞ்சீவ் கம்பீரமாக உள்ளே சென்றுள்ளார்.

இன்று வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற போது மெயின் கதவு திறக்கப்பட்டதும், பிரியங்கா ஓடிவந்து யாரோ வாராங்க என்று கூச்சல் போட்டதை முதல் ப்ரொமோ காட்சியில் வெளியிட்டிருந்தனர்.

தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் மாஸாக எண்ட்ரியாக சஞ்சீவ் வந்தும், வராமலும் அண்ணாச்சியினை வச்சி செய்கின்றார்.

விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் வெங்கட் சீரியலில் மட்டுமின்றி பல படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.