சின்ன வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்கு முதல் இடம். ஆனால் நாம் உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி வாசனையை சேர்க்கும் சின்ன வெங்காயத்தில் அளவுகடந்த மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இது உடல் சூட்டையும் குறைக்க உதவுகிறது.

நன்மைகள்:-

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து இதயம் பலமாகும். அதுபோல மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது.

நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் அதிக பலன் கிடைக்கும். ஆண், பெண் என இரு பாலர்களுக்கும் ஏற்படும் பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும்.

தேள் கொட்டின இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் தலைக்கு ஏறாது. தலை பகுதியில் சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுட வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.