அமெரிக்கா சென்றார் நடிகை ராஷ்மிகா

நடிகர் விஜய் தேவரகொண்டாவை சந்திக்க நடிகை ரஷ்மிகா மந்தான்னா அமெரிக்கா பறந்ததாகக் கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஆனால் எங்கு செல்கிறார் என்பதைக் குறிப்பிடாமல் தொலைதூர இடத்திற்குச் செல்வதாகக் கூறியுள்ளார். மேலும் “இந்த முறை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு செல்கிறேன். ஆனால் நான் விரைவில் திரும்பி வருவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் எங்கு சென்றுள்ளார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. இந்நிலையில் லைகர் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கும் தனது நண்பர் விஜய் தேவரகோண்டாவைச் சந்திக்கச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் தேவரகோண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த ஜோடிக்கென பல ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான திரை ஜோடி யாரென்று கேட்டால் இவர்களைத் தான் கூறுவார்கள். இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட.

இந்நிலையில் தேவரகோண்டாவைச் சந்திக்கத் தான் ரஷ்மிகா அமெரிக்கா சென்றுள்ளார் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்சிங் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்தேவரகொண்டா சர்வதேச குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

லைகர் படத்தில் உலகளவில் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்துள்ளார். தற்போது மைக் டைசன் உடனான படப்பிடிப்பிற்காக ‘லைகர்’ படக்குழு அமெரிக்காவில் உள்ளனர்.