சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி!

இந்தியா தமிழகத்தின் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் இந்தியா – தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 இலட்சம் இந்திய ரூபா நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.