கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 1,538 பேர் பாதிக்கப்பட்டதோடு 06 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் இதுவரை மொத்தமாக 17 இலட்சத்து 61 ஆயிரத்து 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 ஆயிரத்து 468 பேர் மரணமடைந்துள்ளனர்.

கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 23 ஆயிரத்து 796 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 501 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் 1,280 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 17 இலட்சத்து 07ஆயிரத்து 834 பேர் குணமடைந்துள்ளனர்.