இன்ஸ்டாகிராமிலும் சம்பாதிக்கலாம்!

யூடியூப் போலவே இன்ஸ்டாகிராமிலும் வீடியோவை பதிவேற்றி பணம் சம்பாதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இன்றைய காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களில் பொழுதை கழிப்பவர்களே ஏராளம், உலகத்தின் எந்த மூலையில் என்ன நடக்கிறது என்பதை நாம் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்.

அந்தளவுக்கு நம் வாழ்வின் ஒன்றாக மாறிவிட்டது சமூகவலைத்தளங்கள், இதை தங்கள் திறமையை பயன்படுத்தி பணமாக ஈட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் யூடியூப்பை போன்று இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,

மாதம் 89 ரூபாய் செலுத்தி படைப்பாளிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் பார்க்க முடியும்.

இன்ஸ்டாகிராமில் பயனரின் பெயர் பக்கத்தில் இந்த புதிய சந்தா முறைக்கான விருப்ப மெனு இருக்கும் என்று கூறப்படுகிறது.

சந்தா கட்டியுள்ள பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அதிலிருந்து விலகிக் கொள்ளும் வசதியையும் இன்ஸ்டாகிராம் செய்ய உள்ளது.

தற்போது Influencers என்று சொல்லக்கூடிய பிரபலங்கள், ஒரு குறிப்பிட்ட பிராண்டை தங்களது பக்கத்தில் பதிவிடுவதற்காக பணம் பெறுகின்றனர்.

இந்த வீடியோக்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொருத்து இன்ஸ்டாகிராம் பணம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.