நடுரோட்டில்.. 12 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து உதைத்த கொடூரம்!

இந்தியாவில் 12 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி டீ வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கடைக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி சிறுமியை மரம் ஒன்றில் கட்டி வைத்து அடித்துள்ளனர். ஆனால் அருகில் இருந்த மக்கள் யாரும் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சிறுமியை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பசியின் கொடுமையின் காரணமாக செல்போன்களை திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் வீட்டில் இருந்த செல்போனை பொலிஸ் கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் செல்போன் திருடியதாக 12 வயது சிறுமியை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.