சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகாவின் திருமணம் நடந்தேறியது

விஜய் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒளிபரப்பான பெரியவர்களுக்கான சீசன் ஒன்றில் கலந்துகொண்டவர் தான் மாளவிகா.

இவர் இந்த சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு பைனல் எதுவும் வரவில்லை, ஆனால் பாலிவுட்டில் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் இறுதி போட்டி வரை அவர் கலந்துகொண்டார், ஆனால் அங்கேயும் அவர் வெற்றிபெறவில்லை.

ஆனால் அவர் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பாடல்கள் பாடி வருகிறார். அண்மையில் தனக்கு திருமணம் என்றும் தன்னை விட ஒரு வயது குறைந்தவரை திருமணம் செய்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மாளவிகாவிற்கு அழகாக திருமணம் நடந்து முடிந்துள்ளது, இதோ அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்,