வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

தமிழகத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு, சக மாணவன் தாலி கட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி களியக்காவிளை அடுத்த பளுகல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது மற்ற மாணவர்கள் காகிதங்களை கிழித்து மலர்களை போலத் தூவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.